என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதிய தலைமை செயலகம்"
- ஆணையம் சேகரித்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டது.
- வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் தீர்ப்பு அளித்தனர்.
சென்னை:
2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.
இந்த புதிய தலைமைச் செயலகத்தை கட்டியதில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆர்.ரகுபதி ஆணையத்தை கலைத்த சென்னை ஐகோர்ட்டு, ஆணையம் சேகரித்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இந்த மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெறுவதாக அரசு தரப்பில் முறையிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., ஜெயவர்தன் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், இந்த வழக்கில் தன்னை ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் இன்று காலையில் தீர்ப்பு அளித்தனர்.
அதில், இந்த மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்து நடத்தும் படி அரசுக்கு இந்த ஐகோர்ட்டு நிர்பந்தம் செய்ய முடியாது. எனவே, மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெற அரசுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதேநேரம், வழக்கை திரும்ப பெற அனுமதிக்கக் கூடாது என்று ஜெயவர்தன் மனு மீது உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. தள்ளுபடி செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.
- புதிய தலைமை செயலகம் திறப்பு விழா பிப்ரவரி மாதம் 17ம் தேதி தெலுங்கானாவில் நடைபெறுகிறது.
- பிப்ரவரி மாதம் 17ம் தேதி செகந்திரபாத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொள்கிறார்.
தெலுங்கானாவில் புதிதாக மாநில தலைமை செயலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா பிப்ரவரி மாதம் 17ம் தேதி தெலுங்கானாவில் நடைபெறுகிறது.
புதிய தலைமை செயலக திறப்பு விழாவில் கலந்துக் கொள்ளுமாறு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.
இதைதொடர்ந்து, பிப்ரவரி மாதம் 17ம் தேதி செகந்திரபாத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
தி.மு.க. ஆட்சி காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் கட்டிடம் கட்டப்பட்டது.
இதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் கடந்த மாதம் விசாரித்தனர்.
நீதிபதிகள், ‘புதிய தலைமை செயலகம் கட்டிடம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ரகுபதி தலைமையிலான விசாரணை ஆணையத்தின், விசாரணை அறிக்கையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த முடியாது’ என்று கருத்து தெரிவித்தனர்.
பின்னர் போலீஸ் விசாரணைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மணிக் குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர்.
இதையடுத்து நீதிபதிகள், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தடையை வருகிற 22-ந்தேதி வரை நீட்டித்து உத்தர விட்டனர். #TNGovt #DMK #MKStalin #DVAC
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலக கட்டிடம் கடந்த தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டது.
இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், விசாரணை கமிஷன் குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார். விசாரணை கமிஷன் என்பதே கண் துடைப்பு நாடகம் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து, நீதிபதி ஆர்.ரெகுபதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டியதில் முறைகேடு நடந்திருந்தால், அதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிடலாம் என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், மு.க.ஸ்டாலின் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், கே.கல்யாண சுந்தரம் ஆகியோர், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து ஏற்கனவே உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் அட்வகெட் ஜெனரல் சத்தியநாராயணன் ஆஜராகி, “புதிய தலைமை செயலக கட்டிட ஊழல் குறித்து போலீஸ் சுப்பிரண்டு ஒருவர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் பல நூறுகோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பதாகவும். இதன் மூலம் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்”.
வழக்கிற்கு அரசு தரப்பில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தர நீதிபதிகள் விசாரணையை வருகிற நவம்பர் 2-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். அதுவரை தனி நீதிபதி உத்தரவுக்கு பிறப்பித்த தடையை நீட்டித்து உத்தரவிட்டனர். #TNNewSecretariat #MadrasHC
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்